வீடு

எங்கோ தெரிகிறது ஒரு கட்டடம்
அது என் வீட்டைப் போலவே இருக்கிறது
என் நாசியை துளைக்கிறது
அம்மாவின் கைமணம்
அந்தி சாயும் பொழுதோடு
கைமணம் கைகோர்த்து

பட பட சத்தம்
அது நிச்சயமாக
தாளிப்போடு ஒரு யுத்தம்
காற்றோடு ஒரு மெல்லிய இழை
எப்போதோ நான் மறந்து போன இசை
நான் மூச்சிரைக்க வேகத்தோடு ஓடினேன்
என் வீட்டை நோக்கி
இல்லை இல்லை
என் அம்மாவின் மூச்சுக்காற்று
வீசிய திசையை நோக்கி
அம்மா என்று குரல் கொடுத்து ஓடினேன்
என் குரலுக்கு அவள் எதிரொளி கொடுப்பாள்
என்ற நம்பிக்கையோடு
வீட்டை நோக்கி ஓடினேன்
வீட்டை நெருங்க நெருங்க
என் இதயத்துடிப்பை
என்னாலேயே கேட்கமுடியவில்லை
கனத்த சுமையோடு
பூட்டியிருந்த கதவை வருடினேன்
கையில் சிலந்தி வலை குறுகுறுத்தது

எங்கோ தெரிகிறது ஒரு கட்டடம்
அது என் வீட்டை போலவே இருக்கிறது
அம்மா நீங்களே கூறுங்கள்
பின் ஏன் இதுவரை எனக்கு அந்த
தவிப்பு வரவில்லை?

நான் அசந்து உறங்குவதைப்போல
அமைதியாக காட்சி அளிக்கிறது இந்த வீடு
ஆனால் நீங்கள் பாடிய தாலாட்டை
காற்று ஞாபகம் வைத்துருக்கிறதுபோல
அதனால் தான் மழை தூறலில்
உங்கள் மணம் வீசுகிறது
அதனால் தான்
நீங்கள் வாழ்ந்த
நம்முடைய வீடும்
இந்த கட்டத்திலிருந்து
இப்போது நீங்கள்
அமைதியாக உறங்கும்
இடுகாட்டிற்கு மாறிவிட்டதா?

Advertisements
Categories Tamil

2 thoughts on “வீடு

  1. Thats really touching ❤

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this:
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close