தாயுமானவன்!

#அண்ணனுக்காக

நான் பொறந்தப்போ நீ டிப்ரெஸ் ஆகிடகூடாதேனு மடில இருந்த என்ன ஓரமா வச்சுட்டு உன்ன தூக்கி கொஞ்சுன அம்மாகிட்ட பாப்பாவயும் தூக்கிக்கோங்கனு சொன்ன பாசமலர் சிவாஜி
🤺தலையணை சண்டைல, ஒரு தலகாணி பிஞ்சுபோய் வீடெல்லாம் பஞ்சாய் பறக்க, அம்மா அப்பா வர்றதுக்குள்ள க்ளீன் பண்ணவேண்டிய கட்டாயத்துல, சண்டையெல்லாம் மறந்து நாம டீல் பேசிக்கிட்ட மொமென்ட்ஸ் மறக்கமுடியாதவை

நீ ஏழாவது படிக்கிறப்ப, உலகம் அழுஞ்சு எல்லாரும் அடக்கமாகிட்டா அதுக்கப்றம் நம்மலாம் பாத்துக்கவே முடியாதானு அப்பாவியா நான் கேக்க, பதில் சொல்லத் தெரியாம தடுமாறிய இவனுக்குள் எக்கச்சக்க இன்னொஸென்ஸ் அடக்கம்!
அன்னவாசல்ல இருந்து மௌண்ட் சீயோனுக்கு நம்ம படிக்கப்போன பயணங்களை அரசுப் பேருந்துகளும், (முக்கியமா 16), பஸ் பாஸ்களும் அறியும்…சுவையும் சுமையும் சுவாரசியமும் மிகுந்த நாட்கள் அவை.
ரெண்டு பாட்டில்ல தண்ணிய நெரப்பி நடுவுல பத்து ரூபாய் நோட்ட வச்சுட்டு, மொத குடுச்சு முடிக்கிறவங்களுக்கு காசுனு பந்தயம் வச்சப்போ, மடமடனு நீ வேகமா குடிக்கிறத பாத்து நான் கண்பிதுங்கி குடிக்க முடியாம ட்ரெஸ்ஸெல்லாம் ஊத்தி காலி பண்ண ட்ரை பண்றத, குடுச்சுட்டு முடுச்சுட்டு நக்கலாய் பாத்து நீ சிரிக்க, அசடு வழிந்து நான் பத்து ரூபாய எடுத்து கொடுக்க, எதிர்த்த கடையில கடலைமிட்டாய் வாங்கி வந்து எனக்கும் சேர்த்து பங்குபோட்ட பாசக்காரன்..!
என் பொறந்தநாள் அதுவுமா கார் ஓட்டக் கத்துத்தறேன்னு கூட்டிட்டுபோய்,சித்தன்னவாசல் ரோட்ல ஸ்டாப் ஆன கார நீ ரிவெர்ஸ் எடுக்கச்சொல்ல, நானும் ட்ரை பண்ணிதான் பாக்கலாமேனு கார நகத்த, ரோட்டுக்கு நடுவுல கார் திரும்பவும் நின்னுப்போக, கரெக்டா ஒரு பஸ் வந்து நின்னு ஹாரன் அடிக்க, கண்ணுலாம் கலங்கிபோய் கம்முன்னு நான் இரங்கி பின்னாடி போய் உக்காந்துகிட்டப்போ, பஸ் ட்ரைவரும் கன்டக்டரும் கிழித்தெடுக்க, எதுவுமே நடக்காதமாதிரி கூலா கார ஸ்டார்ட் பண்ணி (ட்ரைவர இன்னும் கடுப்பாக்கி)வழிவிட்ட கூலஸ்ட் பெர்சன்!🤗

நீ China கெளம்புன அன்னைக்கு நைட் ஏர்போர்ட்ல, தாரதாரயா நான் கண்ணீர்விட, அப்பா, சித்தப்பா, மணி மாமா லாம் சமாதானப்படுத்த முயற்சித்து தோற்றுப்போக, இந்தப்புள்ளைக்கும் இம்புட்டு பாசமா னு கண்ணெல்லாம் கடலாய் நீ திணறி நிற்க, பார்வை தவிர்த்து தூரம் சென்று கலங்காதவனாய் காட்டிக்கொள்ள முயன்ற காளை!
சோகமாய் நான் சுருண்டுவிடும் நேரங்களில் சூழலை மாற்றி என்னை புதுப்பித்துவிடும் மந்திரக்காரன்!
என் புலம்பல்களை முழுமையாய் கவனிக்கும் ஒற்றை ஜீவன்
என் நிறைகுறைகளை அறிந்து, என்னோடு பயணிக்கும் உயிர்த்தோழன்!
🤓என்னை குட்டுவதற்காகவே நெட்டையாய் வளர்ந்த ஒட்டகச்சிவிங்கி
(ஆம்பள புள்ள குட்டையா இருந்தா நல்லாருக்காதேனு என் வளத்தியில பாதிய உனக்கு விட்டுக்குடுத்துட்டேன்றது வேற விஷயம்)
சிலபல நேரங்களில் தம்பியாய் மாறிவிடும் மழலைமாறா மன்னவன்!

என் தாயுமானவன்!❤

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this:
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close