அதிகாலை!
தட்டி எழுப்புகிறது
சூரிய வெப்பம்…
என் வீட்டில்-வேறு
வெப்பம் காண வழியில்லை
காரணம்
ஏர் கண்டிஷ்னர்-அறை
அல்ல
ஏழ்மை நிலை…
தாயிடம் சென்று
வயிற்றைத் தடவினேன்
இன்று
உணவில்லை கண்ணு-என்கிறாள்
இரண்டு நாட்களாக
இதே பதில்…
பசி மயக்கத்தில்
மறந்தாள் போலும்
பாவம் பத்தினி…
வீதியில் இறங்கினேன்
ஆறடியில்-என்னைப்
பார்த்து -படோபடமாக
சிரிக்கிறது
பாலாபிஷேகம்
செய்யப்பட்ட-தலைவனின்
கட்அவுட்..
இரவும் வந்தது….
நிலவில்-பாட்டி
வடை சுடுகிறாளாமே!
அவளிடம்-யாசிக்க
கை ஏந்தினேன்..
அய்யய்யோ…….
இன்று
அமாவாசை…
enna oru unarvu poorvamana kavithai… uyirai urukki unarvai katti pottirukkum kavithai ithu
LikeLiked by 1 person
Ungal varthaiku mun idhu oru siru pillai vilayatu poleyyyy….
Irupinun thangal paratuku en Nandrigal
LikeLiked by 2 people
Haha…thanadakkam… innum eluthunga..santhithahil magilzhchi
LikeLiked by 1 person
😊
LikeLike
Hello everyone, it’s my first viit at this website, and piece of writing is genuinely fruitful designed for me, keep up posting such artricles or reviews.
LikeLike