இன்று நிரம்ப ஆசை….
நேற்றைய உன்னை தேடி…
சண்டையிடும் போது
கெஞ்சும் உன்
கொஞ்சல் மொழி இன்று
நிரம்ப கேட்க ஆசை…
காரணமின்றி உன்னை
கண்ணீர் சிந்த வைக்கும்
நேரம் இன்றும்
காண ஆசை….
தேவையில்லாமல் சண்டையிட்ட
பொழுதுகளை
தேர்ந்தெடுத்து இன்றும்
காண ஆசை…
வலிப்பதை உணர்ந்தாலும்
வலி என்ற சொல்லால்
வழிய சண்டையிடும்
நாட்களை நிரம்ப இன்றும்
காண ஆசை….
🙂
LikeLiked by 1 person
Beautiful!! Childhood!!
LikeLiked by 1 person