மகிழ்மனை❤ (The Happy home)

– Salai Gaayathri

வீடுகள் மனிதர்களை மட்டுமல்ல, நினைவுகளையும் சேர்த்தே சுமந்து நிற்கின்றன!

அழகான வீடென்பது அடுக்கு மாடிகளிலும், கிரானைட் கற்களிலும், அலங்காரப் பொருட்களிலும் உருவாக்கப்படுவதென நீங்கள் நினைத்திருந்தால், எங்கள் வீட்டை ஒருமுறைப் படித்துவிட்டுச் சொல்லுங்கள்…

அந்த நீண்ட தெருவில்தான் எங்கள் வீடு வீற்றிருந்தது..அது அம்மாவிற்கென அரசாங்கம் கொடுத்த டீச்சர்’ஸ் குவாட்டர்ஸ்..எதிரிலொரு பெட்டிக்கடை..வீட்டை ஒட்டி நூலகம்..அதனருகில் ஆளற்ற வீடு..பெரிய சிவன்கோயிலும், ரெஜிஸ்டர் ஆஃபீசும் சற்று தள்ளி இருந்தன…தார் ரோட்டைத் தாண்டியிருந்த பாழடைந்த பழைய போலீஸ் ஸ்டேஷன் எங்களுக்கு பேய்வீடாகவே தோற்றமளித்தன..

இவற்றிற்கு மத்தியில்தான் எங்கள் ஒட்டுமொத்த குறும்பையும் பொறுத்துக் கொண்டிருந்ததெங்கள் பொக்கிஷம்!

கூறையும், ஓடும், கான்கிரீட்டும் கலவையாக கட்டப்பட்டு, வித்தியாசமாய், ஆனால் பேரழகாய் இருக்குமந்த சிறு வீடு!

நாலாப்பக்கமும் வீடு! நடுவில் திறந்தவெளி..அங்கே பெரிய கிணரொன்றும் அம்மா உருவாக்கிய சிறு தோட்டமும் இருந்தன..வீட்டின் வாசலில் பெரிய திண்டும், நிழலுக்கென போடப்பட்ட கொட்டகையும் இருக்கும்!

வீட்டின் வெளிப்புறக் காம்பௌன்ட்,,, சுவற்றையொட்டி சரிந்திருந்த வேளையில், அண்ணன் எதேச்சையாக அதன்மீதேறி கான்கிரீட்டின் மேல்புறத்தை அடைந்த வேளையில், நாங்கள் எங்களுக்கேயான மொட்டை மாடியை கண்டுபிடித்திருந்தோம்.. அன்றிலிருந்து சிலநாட்கள், பல் விலக்குவதிலிருந்து, காபி குடிப்பது, பாடம் படிப்பது, நிலா ரசிப்பது, ஏன் சும்மா இருப்பதற்குகூட நாங்கள் கண்டுபிடித்த மொட்டை மாடியையே தஞ்சமடைந்தோம்..

கம்பியொன்றைப் பிடித்து லாவகமாக ஏறி, பின் சரிந்த சுவற்றில் கால்வைத்து எவ்வொரு பிடியுமின்றி பத்திரமாக ஏற வேண்டுமென்பதால் பயமற்றவர்கள்தான் எங்கள் மாடிக்கு வர இயலும்.. மேலிருந்து பார்த்தால் வீட்டின் நடுப்பக்க கிணறும் தோட்டமும் அம்சமாய் தெரியும்..

வீட்டின் நடுப்புறமிருந்த கிணற்றில், நீர் வற்றியதேயில்லை.. அண்ணனும் நானும் கிணற்றிலிருந்து தினம் ஐம்பது வாளி தண்ணீர் இரைக்க வேண்டுமென்பது பெற்றோரிட்ட பணி.. கோயில் குளத்திலிருந்து மீன்பிடித்து வந்து கிணற்றில் விடுவதை நாங்கள் விரும்பி செய்து கொண்டிருந்தோம்… கிணற்று மேட்டைச் சுற்றிலும்கூட அம்மா தொட்டித் தோட்டமிட்டு பராமரித்து வந்தாள்..

மழைக்காலங்களில், ஓட்டுப்பகுதி பயங்கரமாய் ஒழுகும்.. மழை தொடங்கியதுமே பாத்திரங்களை எடுத்து நீரொழுகும் இடங்களில் வைப்பதில் அம்மா மும்முரமாகி விடுவாள்..அதற்காக என்றுமே அவள் புலம்பியதேயில்லை! எங்களுக்கும் வீட்டுக்குள் மழை என்பது பிடித்த விஷயமாகவே இருந்தது..
மழைவேளையில் கிட்சனில் அம்மா சமைக்க வேண்டுமெனில், நானோ அண்ணனோ அம்மா நனைந்து விடாமலிருக்க முறத்தை உயர்த்திப் பிடித்தவாறு சமையல் முடியும்வரை அமர்ந்திருப்போம்… அதற்காக அம்மா வருந்தினாலும் நாங்கள் அதை ரசித்தே செய்திருந்தோம்!

இன்று எங்களுக்குள் இல்லாத ஏதோவொன்றை அந்த வீடு எங்களுக்கு வழங்கியிருந்தது..

வேலைகள் தினந்தினம் எங்களுக்குள் பிரிக்கப்பட்டிருக்கும்..

அந்த வீட்டு வாசலில்தான் நான் கோலம்போட கற்றுக்கொண்டேன்.. விழாநாட்களில் என் கோலங்களுக்கு வண்ணம் தீட்ட அண்ணன் அப்பொழுதெல்லாம் தயங்கியதேயில்லை..

வாரம் ஒருமுறை ஊரணிக்கு கூட்டிச்சென்று அப்பா நீச்சலடிக்க கற்றுக்கொடுப்பார்… அண்ணன் சமத்தாய் கற்றுக்கொள்ள, நான் மீன்கடி மட்டுமே வாங்கும் மக்குப்பிள்ளையாகவே இருந்திருக்கிறேன்… அதற்காக அப்பா என்னை என்றுமே கோபித்துக்கொண்டதில்லை…

அப்பொழுதெல்லாம் குளிர்சாதனப்பெட்டி எங்களுக்கு அத்தியாவசியமாய் இருந்ததில்லை… நொறுக்குத் தீனிகள், இனிப்புகள் என தனித்தனி சம்படத்தில் அம்மா பத்திரப்படுத்தி வைத்திருப்பாள்…
அன்று அப்பாவிடம் மட்டுமே நோக்கியா மொபைல் இருந்தது..எங்களுக்கு அது அவசியமற்றதாய் இருந்து வந்தது..

அதே தெருவில் ஆளற்ற வீடொன்றில் செழிப்பாய் வளர்ந்திருந்த கருவேப்பிலை மரத்தின் கிளைகளில் ஏறி அமர்ந்துகொண்டு கருவேப்பிலைப் பழங்களைப் பறித்துத் தின்றுக்கொண்டே நான் படித்ததுமுண்டு.. அப்படியே உறங்கிப்போய் விழுந்த கதையுமுண்டு…

நான் மட்டும் தனியாக இருக்கும் நேரங்களில், பாம்பிற்கு பயங்கரமாய் பயந்துகொண்டு கட்டில்மீது நாற்காலியை சுவற்றில் சாய்வாக ஏற்றிவைத்து அதன்மீது நானேறி சம்மனமிட்டுக்கொண்டு சுற்றிசுற்றி வேவு பார்த்துக்கொண்டு, ஆள் வரும்வரை மணிக்கணக்கில் கீழிறங்காமல் பசியோடு கிடந்திருக்கிறேன்… பாம்பிற்கு அளவுக்கதிகமாய் பயந்து நடுங்கியிருக்கிறேன்..(இன்றளவும்)

எனது சனிக்கிழமைகளில் நூலகத்திலேயே புதைந்திருக்கிறேன்.. தெனாலிராமனையும், அலிபாபாவையும், பாரதியையும், அவைதான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தன..

அந்த வீட்டு வாசலில், கயிற்றுக்கட்டிலில் அமர்ந்துகொண்டு அப்பாவின் வருகைக்காக நானும், அண்ணனும், அம்மாவும் ஒவ்வோர் மாலையும் காத்துக்கிடந்தோம்..

எனக்கு பூட்டுசாவி திறக்கத் தெரியாத வயதில் அந்தத் திண்டுக்களில்தான் நான் விளையாடிக்கொண்டிருந்தேன்…

இன்று எங்களிடம் இல்லாத ஏதோவொன்றை அந்த வீடு எங்களுக்கு கொடுத்திருந்தது..

அண்ணனின் படிப்பிற்காக ஐந்தாண்டுகளுக்கு முன் நகரம் சென்று பின் எங்கள் பள்ளிப்படிப்பு முடிந்து பூர்வீகத்திற்கே திரும்பிவிட்ட நிலையிலும் அந்த வீட்டில்தான் இன்றில்லாத ஏதோவொன்றை நாங்கள் பெற்றிருந்தோம்… அங்கு நாங்கள் சொகுசற்றிருந்தாலும் சந்தோஷமாய் இருந்தோம்..

ஐந்தாண்டுகளுக்கு பின் இன்றுதான் அங்கு அடிவைக்கிறேன்.. இதோ! என் சிறுவயது நினைவுகளை ஒட்டுமொத்தமாய் சேமித்துவைத்து ஏக்கமாய் பார்த்து சிரிக்கிறதந்த பொக்கிஷம்.. முதியோர் இல்லத்தில் தாய்தந்தையை விட்டுவிட்டு பலமாதங்கள் கழித்துப் பார்க்கச் செல்லும் மகனின் மனம்போல கனத்துக் கிடக்கிறது இதயம்!!

பராமரிப்பின்றி ஒட்டடைப் படர்ந்தும் அழகாகவே காட்சியளிக்கிறது.. வாசல் கூரைகள் காணாமல் போயிருந்தன.. திண்டுகள் பெயர்க்கப்பட்டிருந்தன… கதவுக் கம்பிகள் துருப்பிடித்திருக்கின்றன.. நடுப்புறத் தோட்டத்தில் புற்பூண்டுகள் மண்டிக் கிடக்கின்றன.. ஓடுகள் ஆங்காங்கே வரிசை இழந்துள்ளன.. அண்ணன் கண்டுபிடித்த மாடிப்படிகள் மொத்தமாய் தகர்க்கப்பட்டிருந்தன.. கிணற்று மீன்கள் மட்டுமே சத்தம் கேட்டு சலசலக்கின்றன..

இத்தனை வருடங்கள், இந்த வீடும் மீன்களும் எங்கள் குறும்புகளைப் பேசிப்பேசிக் களைத்துபோய் கிடப்பதாய் தோன்றியதிந்ந கல்நெஞ்சுக்காரிக்கு..

கனத்த மனதுடன் கிணற்று மேட்டில் அமர்ந்து கொள்கிறேன்…

இன்றில்லாத ஏதோவொன்றை இந்த வீடு எங்களுக்கு வழங்கியிருந்தது…

இன்று நேரமிருந்தும் அம்மாவிற்கு உதவாத அப்பா அன்று நேரமற்றிருந்தும் அத்துனை வேலைகளையும் பகிர்ந்து கொண்டிருந்தார்..

“சாப்டியா”னு எங்கேயோயிருந்து கேட்டுக்கொள்கிற அம்மா, அன்று சாப்பாட்டை மிச்சம் வைத்துவிட்டால் முட்டிபோடச் சொல்லி மிரட்டிக் கொண்டிருந்தாள்…

இன்று கையைவிட்டு அகலாதிருக்கும் மொபைலை அன்று நாங்கள் சட்டைசெய்ததே இல்லை..

இன்று அடுக்கு மாடிகளில் இல்லாத உணர்வை, அன்று எங்கள் மொட்டைமாடி வழங்கியிருந்தது…

இன்றுள்ள வசதிகளில் கிடைக்காத ஏதோவொன்றை அங்கு நாங்கள் பெற்றிருந்தோம்!

சொகுசற்றிருந்தாலும் அங்கு நாங்கள் சாந்தோஷமாய் இருந்தோம்… நாங்கள் நாங்களாய் இருந்திருந்தோம்…

வீடுகள் மனிதர்களை மட்டுமல்ல நினைவுகளையும் சேர்த்தே சுமந்து நிற்கின்றன! இப்பொழுதெல்லாம் வீடுகளுக்கும் உயிர் இருப்பதாகவே தோன்றுகிறதெனக்கு❣

Advertisements

14 thoughts on “மகிழ்மனை❤ (The Happy home)

 1. super…..😍…nice at all…….

  Liked by 1 person

  1. Vino durairaj Jul 5, 2018 — 18:43

   😄😊superb..

   Liked by 2 people

  2. Salai Gaayathri Jul 5, 2018 — 21:29

   Thank u bro

   Like

  3. Salai Gaayathri Jul 5, 2018 — 21:32

   Thank u da

   Like

 2. Gayu ma😍😍 congratzzz……great way ahead😎😘

  Liked by 1 person

 3. sindhu sweet Jul 5, 2018 — 20:32

  Gayu ma…..congrats😍😎awsum lines….great way ahead dr😘

  Liked by 1 person

  1. Salai Gaayathri Jul 5, 2018 — 21:30

   Thank u dear😘❤

   Like

 4. Doing great da keep it up👌👌❤

  Liked by 1 person

 5. Nice 👍

  Liked by 1 person

 6. Sabarinathan Jul 6, 2018 — 12:03

  Awesome sister……. U done a great job about memories of old homes…. Nowadays people need attractive “house” only but they forgot what is the real meaning of home…….your writing skill is excellent and keep going…… Iam expecting a book from your writing soon……god bless you and iam proud to say that u r my sister………..

  Liked by 1 person

  1. Salai Gaayathri Jul 6, 2018 — 12:39

   Thank u bro

   Like

 7. arumaiyana pathivu..ithaipparkum pothu..Kerala vil ulla idam pola therikirathu…

  Liked by 3 people

 8. Really nice..can imagine that atmosphere..it’s was good experience.. 😊 looking more from u.

  Liked by 2 people

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this:
search previous next tag category expand menu location phone mail time cart zoom edit close